saleeka - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : saleeka |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 11 |
தூங்கா நதிகளும்
தூங்குதடி - என்
தூங்கும் விழிகளோ
ஏங்குதடி
தனியே நிலவாய்,
சூரியனாய் காய்ந்தேனே...
ஓவியமாய் வரைந்தேனே
தூரிகையாய் எறிந்தாயே
உன்னை காவியமாக்கி கரைந்தேனே
என்னை கவிஞனாக்கி கரைந்தாயே...
பன்னீர் மேகங்கள்
வெண்ணீர் ஊற்றுதடி - என்
கற்பனை கனவுகளிலும்
கல்லறையே பூக்குதடி
சொட்டாத சொற்களும் - என்
கவிதைகளில் கண்ணீர் சொட்டுதடி
என் மனதில் கார்த்திகையானாய்
ஏன் மயிலிறகே மறைந்து போனாய்.
தங்கை கொண்டதால் தாயானேன்
தவறிழைத்ததால் தந்தையானேன் - தாரமே
தாயாய் உன்னை பெற்றதால் சேயானேன்...
பாவி நான் பாட்டுரைத்தேன்
பாவத
என்
எண்ணக்கல்கள்
உன்
நினைவு குளத்தில்
காதல் அலையை
உருவாக்கவில்லையா ?
ஏனிந்த மவுனம் ?
கடலின் மவுனம்
சுனாமி எச்சரிக்கை ......
உன் மவுனம்
எனை சுட்டுக்கொல்லும்
எரிகற்கள் .....
புரியவில்லையா
உனக்கு ?
உயிரோடும்
உடலோடும்
போராடும் இந்த
காதல் தவிப்பு .....
அவசரப்பிரிவில்
இருக்கும்
என் இதயத்துடிப்பை ..
உன் காதலெனும்
சுவாசத்தை
எடுத்தெறிந்து
நிறுத்திவிடாதே.......
கடந்து போன நாட்கள் ,
நடந்து திரிந்த இடங்கள்,
மடிந்து போன நிஜங்களாய்...
தொடர்ந்து ஒலித்த நம் சிரிப்பொலிகள்
இன்று எட்டி விட முடியா
தொலைவுதனில்!
அழிந்து போகா நம் நினைவுகளில்
அலைந்து திரியுது நேற்றைய சுகங்கள்!
கண்ணாடி முன் நின்று பார்த்தால்
என் கலையிழந்த முகமே காட்சியாய்..
பட்டாம்பூச்சியாய் சிறகடித்த நாட்கள்
பட்டென்று காணமல்போய்விட்டது!
கதறி அழ முடியாமல்
மௌனமாய் நான் இங்கு
கண்ணீர் சிந்துகிறேன்,
கலைந்து போன நம்
உறவை எண்ணி!!!
அந்த
பிஞ்சு விரல்கள்
தாயின் விரலைபிடித்து
கெஞ்சியது ...........
கற்புக்கு கவசமில்லா
இப்புவியில்
ஏனம்மா எனை
அழைத்தாய் ?
துள்ளிவிளையாடும்
குழந்தைகளிலும்
எள்ளிநகையாடும்
காமுகர்கள்
கூட்டத்தில் ஏனம்மா
எனை அழைத்தாய் ?
காதலுக்கு இணங்கா
கன்னியர் முகத்தில்
அமிலமூற்றும்
அரக்கர்களிடயே
ஏனம்மா
எனை அழைத்தாய் ?
அழைத்துவிட்ட அம்மா
எனை எப்படி அரவணைக்கப்
போகிறாய் ?
அந்த
பிஞ்சு விரல்கள்
தாயின் விரலைபிடித்து
கெஞ்சியது ...........
கற்புக்கு கவசமில்லா
இப்புவியில்
ஏனம்மா எனை
அழைத்தாய் ?
துள்ளிவிளையாடும்
குழந்தைகளிலும்
எள்ளிநகையாடும்
காமுகர்கள்
கூட்டத்தில் ஏனம்மா
எனை அழைத்தாய் ?
காதலுக்கு இணங்கா
கன்னியர் முகத்தில்
அமிலமூற்றும்
அரக்கர்களிடயே
ஏனம்மா
எனை அழைத்தாய் ?
அழைத்துவிட்ட அம்மா
எனை எப்படி அரவணைக்கப்
போகிறாய் ?
தனி தெலுங்கானா மசோதாவை எதிர்க்கும் ஆந்திர மாநில MP-க்கள் பாராளுமன்றத்தில் கத்தி மற்றும் மிளகு தெளிப்பான்களை பயன்படுத்தியுள்ளனர். இதனால் பாராளுமன்றம் முடங்கியுள்ளது. அது பற்றிய உங்கள் கருத்து.
திங்களாய் வந்து
இரவுகளை
இனிமையாக்கினாய் ....
விழிதிறந்திருந்த
போதே
கனவாய் வந்து
பகலில் பசி
போக்கினாய்.....
கலைந்த முடிகளை
கவனத்திற்கு
கொண்டுவந்தாய்
கசங்கிய சட்டைக்கு
இஸ்த்ரி போடவைத்தாய் .....
கடைசியில் ...........................
கணவனின் கோர்த்து
நடக்கையிலே
கடைக்கண்ணால்
எனைப்பார்த்து
சிரித்தாயே...
சிரித்தது நீ ...
செத்தது
என் காதல் !
என்ன குற்றத்திற்காக
எங்களுக்கு -இந்த
ஆயுள்தண்டனை !
எங்களுக்காக
வாதாட வக்கீலும்
தீர்ப்பு சொல்ல
நீதிமன்றங்களும்
ஏன் இல்லை ?
காட்சிபொருளாய்
பார்க்கும்
மனசாட்சியற்ற
மனிதர்களே ....
பதில் கூறுங்கள் !