என் காதல்

திங்களாய் வந்து
இரவுகளை
இனிமையாக்கினாய் ....
விழிதிறந்திருந்த
போதே
கனவாய் வந்து
பகலில் பசி
போக்கினாய்.....
கலைந்த முடிகளை
கவனத்திற்கு
கொண்டுவந்தாய்
கசங்கிய சட்டைக்கு
இஸ்த்ரி போடவைத்தாய் .....
கடைசியில் ...........................
கணவனின் கோர்த்து
நடக்கையிலே
கடைக்கண்ணால்
எனைப்பார்த்து
சிரித்தாயே...
சிரித்தது நீ ...
செத்தது
என் காதல் !