காதல் தவிப்பு

என்
எண்ணக்கல்கள்
உன்
நினைவு குளத்தில்
காதல் அலையை
உருவாக்கவில்லையா ?

ஏனிந்த மவுனம் ?
கடலின் மவுனம்
சுனாமி எச்சரிக்கை ......

உன் மவுனம்
எனை சுட்டுக்கொல்லும்
எரிகற்கள் .....

புரியவில்லையா
உனக்கு ?
உயிரோடும்
உடலோடும்
போராடும் இந்த
காதல் தவிப்பு .....

அவசரப்பிரிவில்
இருக்கும்
என் இதயத்துடிப்பை ..

உன் காதலெனும்
சுவாசத்தை
எடுத்தெறிந்து
நிறுத்திவிடாதே.......

எழுதியவர் : saleeka (3-Mar-14, 5:04 pm)
சேர்த்தது : saleeka
Tanglish : kaadhal thavippu
பார்வை : 266

மேலே