சந்திப்பின் சங்கதிகள்

வார்த்தை ஒன்றும் பரிமாற வில்லை,
பரிமாற ..
வெவ்வேறாய் நாங்கள் இல்லை, அதனால்!

விழிகளுக்கோ வெளி உலகம் இல்லை,
வேண்டியது கண்முன்னே, அதனால்!

மனதினுக்கோ மௌனம் இல்லை,
அதன் மொழியை புரிந்து கொள்ள ஒருவன், அதனால்!

நான் என்பதற்கும் அர்த்தம் இல்லை -இனி
நடப்பவை அனைத்தும் நமதாகி போனது, அதனால்!

எழுதியவர் : மஹா (23-Feb-14, 5:29 pm)
சேர்த்தது : mahakrish
பார்வை : 101

மேலே