கல்விகூடம்

கல்வி கூடம் என்பது
வாழ்க்கையின் ஆரம்ப புள்ளி
மனிதனின் அடிப்படை தகுதி
எதிர் கால நிர்ணய கோடு
புத்தக பையை சுமந்தால்
அறிவை கூலியாய் தரும்
முதலாளி
ஆசிரியர்கள்
கடவுளாய் மாறும்
கோவில்
திறமையையும்,
வாழ்க்கையையும்
ஒரு சேர வளர்க்கும்
அன்னை

கல்வி கூடம் என்பது
கல் சுவர் கொண்ட
அறை மட்டுமல்ல

கல்வி கூடம் என்பது
இங்கே மனிதனின் இரண்டாம் கருவறை

எழுதியவர் : ந.சத்யா (23-Feb-14, 9:37 pm)
சேர்த்தது : சத்யா
பார்வை : 111

மேலே