திருவினை தா
முழு நிலவின் முன்னமர்ந்தேன்!
முழுக் கவிதை நான் படைப்பேன்...
மூத்தவனை முன்னே வைத்தேன்!
தோத்திரங்கள் நான் படைத்தேன்...
முற்றுந் துறக்க வேண்டும்
மூல முதற் பொருளே!
முழுவதையும் ஏற்க வேண்டும்
மூல முதற் பொருளே!
சற்றும் குறைக்காதே
சாலக் கற்றவனே!
சுற்றம் குறை கூறும்...
சூழ்நிலையும் எதிராகும்!
கற்றனைத்தும் ஊற வேண்டும்!
காவியம் நான் பாட வேண்டும்!
கற்பனை ஓடைக்குள்ளே
களித்துக் கரையேற வேண்டும்!
கற்பனை தா! காவியம் தா!
காதலும் தா! - கருவெனும்
திருவினைத் தா!