+சரித்திரத்தில் நிச்சயமாய் இடம் பிடிப்பேன்+

சூரியனாய் பிறப்பேன்
சந்திரனாய் பிறப்பேன்
பூமி எங்கும் எப்பொழுதும்
ஒளி கொடுப்பேன்

காவேரியாய் வாழ்வேன்
கண்ணகியாய் வீழ்வேன்
சரித்திரத்தில் நிச்சயமாய்
இடம் பிடிப்பேன்

சூரியனுக் கெப்போதும் அழிவில்லை!
அவன் இல்லையென்றால்
பூமியினில் உயிரில்லை!
எப்போதும் ஜெயிப்பவன் சூரியனே!
தினம் வீழ்ந்தாலும்
எழுவது அவன் கொள்கை!

தினம்நூறு கவிதை கொடுப்பவனேநிலா!
ராத்திரியின் வானத்தின்
ராஜா அவனே!
கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போனாலும்
மீண்டும் பௌர்ணமியாய்
எழுந்துவந்து ஜொலிப்பவனே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Feb-14, 12:58 pm)
பார்வை : 83

மேலே