வெண்மையும் தன் நிறமாறியதே

சம்பந்தம் பேசி முடித்து
திருமணமும் நடந்தேறியது ......
மனத்திற்கும் மனத்திற்கும் அல்ல ........!
பணத்திற்கும் பணத்திற்கும்..........!

அன்றே மேடையில்
அக்னிச் சுவாலை
அபாய ஒலி எழுப்பியதோ
பின்னொரு நாளில்
தனியறையில் வாயு உருளை
வெடித்தவளை சிதறடிக்குமென்று ....!

அறியவில்லை போலுமவள் ,
மூன்று முடித்திட்ட கையறு
தன்னைக் காப்பாற்றும்
என்றெண்ணி யவளுக்கு
அவனிடும் நாண்காவது முடிச்சில்
அவள் மூச்சு நிறுத்தி வைக்கப்படுமென்று........!

மனமும் மனமும் இணைவதே
திருமணம் என்றார்கள் ......
ஆனால் ,
பணம் சென்றதும்
மீண்டும் மறுமணம் என்கிறார்கள் ........!

என்னடா இது ...?

கணவன் இறந்தால் பெண்ணுக்கு
வெண்ணிறையுடை விதவையென்று ......
மணைவி இறந்தால் ஆணுக்கு
வெண்ணிறையுடை சுபமங்கலமென்று ....
மணமகன் என பெயர் சூட்டி.....


யாருணர்வார் இச் சமுதாயத்திற்கு
இன்னொரு விடுதலை
அன்பின் மூலம்
வேண்டுமென்று ...............!

எழுதியவர் : இனியவன் வே நந்தகுமார் (24-Feb-14, 2:16 pm)
பார்வை : 69

மேலே