எப்படி சொல்வேனடி

சொல்ல தான் நினைக்கிறேன்
சொல்லாம தவிக்கிறேன்!

அத்தை பெத்த ரத்தினமே -என்
சித்தி போட்ட வெற்றிலையே!
கட்டழகு காளையடி -நான்
கருத்தமேனியடி!
புத்தியிலே நீ வந்து
வெற்றிலையாய் சிவக்குதடி!!

பட்டுடல் மேனியடி!
பார்த்த கண் மூடாதடி!
பச்சைகிளி உன் மேலே
இச்சை கொண்ட என்காதலடி!!

பருவத்தில் பார்க்கையிலே!
புருவமெல்லாம் உயருதடி!
புஷ்டியெல்லாம் முறுக்குதடி!
பாவி மனம் தவிக்குதடி -உனை
பார்த்திடவும் துடிக்குதடி!!

கஷ்ட காலத்தாலே -என்
தாயவளும் போனாளே!
வளர்த்த தாயவளும்
உன் குணம் பார்த்து வெறுத்தாளே!!

எனக்குனு யாறிருக்கா!
ஏக்கத்துல தவிக்கிறேனடி!
எப்படி என் காதல் சொல்வேன்
ஏற்றுகொள்ள நீ மறுத்தா!
என் உயிரும் கரையுமடி...!!

பிஞ்சிலே வந்த சோகம்
நெஞ்சிலேயே இருக்குதடி!

கூப்பாடு போடாம
வேலி தாண்டி நாங்குதிச்சு!
பின் வாசல் வழியாலே
நான் வந்துணைபார்த்து!
என் காதல் சொல்லிட
என் மனமும் தவிக்குதடி!!

முன்ஜென்ம பகையாலே
முறைச்சு நிக்கா மாமனவன்!
உனை பெண் கேட்டு வந்தாலும்
பிச்சிடுவான் உன் அப்பன்!
பத்துபேரு வந்தாலும்
ஒத்தையாலா நான் நிற்பேன்!
உடம்புந்தான் வலுவடி-உன்
உள்ளம் அறியா குழம்புதடி!!

எப்பாடு பட்டெனும் உனை காப்பேன்!
ராணியா வைச்சுக்க என் மனசு துடிக்குதடி!
உன்மனசில் யாறிருக்கா ?
அறியாமல் தவிக்கிறேனடி!

அழகுமயில் நடனம் போல்
அசைந்து அசைந்து போறவளே!
கருப்பனை நீ கடைக்கண் பார்ப்பாயோ!!?
வெறுப்பினில் தவிர்பாயோ!!

சொல்லத் தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன் ...

எழுதியவர் : கனகரத்தினம் (24-Feb-14, 4:22 pm)
பார்வை : 950

மேலே