ஜன்னல் வழியே - பூவிதழ்

உன்னுள் புதைந்த இரவுகளெல்லாம்
என் டைரியின் பக்கங்களில் வெளிச்சமாய் !

என் இளமை போர்த்தி உன் பருவம் பறிக்கும்
அறுவடை திருவிழா !

உன்னை வருடும்போதெல்லாம் என் விரல்கள்
நகம் கடிக்கிறது வெட்கத்தால் !

உன் மார்புச்சூட்டில்
முகம் புதைக்கிறேன்
என் இதயம் மூச்சு விடுகிறது உனக்கும் சேர்த்து !

உன் இதழ் சுவைக்கிறேன் பலமுறை
இம்முறையாவது சுவையஅறிவோம் என !

உன் நிர்வாண உடையில் எனைபோர்த்தி
வியர்வைத் துளி துடைக்கிறாய்
இதழ் துண்டுகொண்டு !

உணர்வுகள் உயிருடன் பேசும் புதுமொழி
இதழ்கொண்டு உயிர் உறிஞ்சும் புது வலி !

உரசி உரசி அணைந்துபோனது ஆசை !
துணையுடனே தூங்கிப்போனது ஓசை !

இரவுமட்டும் விழித்திருக்கிறது
பூட்டிய அறைக்கு காவலாய் !

அவிழ்த்து வைத்த ஆடைகளை
அந்தரங்கமாய் பார்த்து செல்கிறது நிலவு
ஜன்னல் வழியே!

எழுதியவர் : பூவிதழ் (24-Feb-14, 5:07 pm)
பார்வை : 157

சிறந்த கவிதைகள்

மேலே