காதல் நினைவுகள்
அன்றைய
நம் சந்திப்புகளின் அந்திமங்களில்
நீ ஒவ்வொரு முறை
விடைபெறும் போதும்
நினைவுப் பரிசு ஒன்று தருவாய் .......
கிளிஞ்சல் மோதிரம் ....
கீற்று கிலுகிலுப்பை .....
ஒற்றை ரோஜா ....
உடைந்த வளையல் .....
பறக்கும் முத்தம் ....
பாடும் வாழ்த்து அட்டை ....
இப்படியே இன்னும் இன்னும் எத்தனையோ...
இன்று
இறுதியாய்
இந்த பட்டியலில்
உன் உறவுக்காரனோடான திருமண அழைப்பிதழும்!