என் வாழ்வின் விடுகதை
அருகே அமர்ந்து
ஆசையோடு பேசிய
அன்பு வார்த்தையெல்லாம்
அழிந்தே போனதடா - நீ
ஆதாரமின்றி எனை
அனாதரவாய் விட்டுச் சென்றதும்!
தொலைவில் இருந்து
தொடராய் சொன்ன
தொல்லைதரா கதைகளெல்லாம்
தொலைந்தே போனதடா - நீ
தோல்விகளை எனக்கு
தோழனாக்கிச் சென்றதும்!
பார்வைகள் ஒவ்வொன்றும்
பழைய கதை பேசிச் செல்ல
பார்க்காதவன் போல் நீ
பாதைதனிலே - உன்
பார்வை பதித்து போகையில்
பாவை இவள் நெஞ்சம்
பாகாய் உருகுதடா!
விழி மூடினால் உன் விம்பம்
விழித்திருந்தால் யாவும் துன்பம்
வில்லங்கமற்ற என் வாழ்வுக்கே
விடையென வந்தாய் - இன்று
விரல் விட்டு எண்ணும் நாட்களிலே
விடை தெரியா விடுகதையாகிப் போனாய்!!!