நீ இல்லா இரவுகள்
எவரிடமும் வாதிடமுடியா
சொல்லி பகிரமுடியா
பின்னிக் குமையும்
எண்ண சிக்கல்களை
நீ இல்லா இரவுகளில்
உன் நீங்கா நினைவுகளுடன்
பகிர்ந்து கொள்கிறேன்......!
இரவுகள் வெளுத்த பின்னும்...........
மோகத்திமிரில் மீட்டிய
ராகங்களும்......
மௌன புன்னகையில்
பேசிய பாசைகளும்......
செங்காந்தள் பூவிதல்களில்
பருகிய தேனும்......
உயிர் குடிக்கின்றன.......
இரவுகள் வெளுத்த பின்னும்................
எழுதப்படாத விதியில்
சொல்ல படாத
உன் மரணம்........!
தொடரும் சாபங்களால்
தீர்க்கப்படாத தீர்மானங்கள்....!
நான்......
நிதானித்து எழும்
வேளைகளில்.........
என் கண்முன்னே
உன் மாறாப்புன்னகைகள்.......!
நீ இல்லா இரவுகள்.......
நீள்கின்றன
சிரிக்கின்றன
அழுகின்றன
அனுதாபிக்கின்றன
ஆளாபிக்கின்றன
ஆம்...........
நீ இல்லா இரவுகள்.....
எனை சுடுகின்றன..................!
வானம் வெளுத்த பின்னும்.......!