கவிதை துளிகள்

புலியைக் கொன்று
புகழ் தேடிக் கொண்டார்கள்
பசுத்தோல் போர்த்திய புலிகள்!

விற்றபணம் செலவான நேரம்
வீடுதேடி வந்துவிட்டது
வளர்த்தப் பசு!

மிருகவதைக்கான
பாத யாத்திரை சென்றவர்களின்
கால்களில் மாட்டுத்தோல் செருப்பு!

அசைபோட்டது மாடு
வாழ்ந்த நாட்களை
கசாப்புக் கடை வாசலில்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (25-Feb-14, 2:30 am)
பார்வை : 230

மேலே