காதல்

காதல் என்பது உலகின் அழகான நிகழ்வுகளின் ஒன்றாகும். அனைத்து காதலர்கள் மனதிலும் கவி நடையிலே காதல் வாழ்கிறது. முதல் காதல் அன்னையிடமிருந்து இரண்டாம் காதல் தந்தையிடமிருந்து பின்பு எல்லா உறவுகளிடமிருந்தும் காதல் தோன்றும். நாம் அனைவருமே காதலர்களே ஒவ்வொரு உறவுகளிடமிருந்தும். என் தாய் மீது நான் கொண்ட காதலும் என் தமிழ் தாய் மீது கொண்ட காதலும் என்னவள் மீது கொண்ட காதலும் ஒன்று தான் என்றே நான் நினைக்கிறேன். என்னை இந்த உலகிற்கு அறிமுகம் செய்தவள் என் அன்னையானவள் நான் அவளுக்கு செய்யும் அனைத்துமே காதலில் உள்ளடங்கும். அறுசுவைத் தமிழால் என் கருந்துகளை பிறரிடம் பகிற்ந்து கொண்டும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தமிழன்னைக்கு நான் செய்யும் சேவைகள் அனைத்தும் காதல் தான். என்னவளுக்காக எழுதும் கவியும் காதல் தான். காதல் இல்லாத மனிதன் இல்லை இவ்வுலகில். உலகின் தலைச்சிறந்த தலைவர்கள் வாழ்க்கையிலும் காதல் ஒரு அழியா நிகழ்வாகவே இருக்கிறது. காதல் உணர்வு இல்லையெனில் உணர்ச்சிகளற்ற உயிர் தான் மனிதனும். காலத்தின் மாறுதலாக இப்போது புங்காவிலும் திரைஅரங்கிலும் வாழும் காதலுக்கு நடுவில் உண்மை காதலும் வாழ்கிறது எதோ ஒரு மூலையில். காலம் மாறினாலும் காதல் மாறாது. "காதல் வாழ்க"

எழுதியவர் : கோபி (25-Feb-14, 6:13 am)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : kaadhal
பார்வை : 327

சிறந்த கட்டுரைகள்

மேலே