ஆறாம் அறிவு
மனதின் நிலை சொல்லவா
அது பெறும் புயல் அல்லவா???
நெஞ்சின் கூட்டுக்குள்
நெருஞ்சி முள் தைத்த வலி,,,,,,,,
காரணம் எது என்று
கண்டுகொள்ள விருப்பமில்லை.....
நேரமும் காலமும்
விதியின் வசமெனில்
மனிதனுக்கேன் ஆறாவதாய்
ஓர் அறிவு !!!!!!
மனதின் குழப்பம் எல்லாம்
மனிதனின் உணர்ச்சியால் தானே!!!
அன்பென்றும், பாசமென்றும்
வெறுபென்றும் கோபமேன்றும்
ஆசையென்றும் காதலென்றும்
மானமென்றும் அவமானமென்றும்
சோகமென்றும் கண்ணீர் என்றும்
பிறபென்றும் இறபென்றும்
எல்லாமே விதியின் வசமென்றால்
எதற்கு எனக்கு இப்படி ஓர் அறிவு!!!
விதி சொல்லி நான் சிரிக்கிறேன்
விதி சொல்லி நான் அழுகிறேன்
மதி என்று இருந்தும்கூட
விதி வசத்தால் தவறிழைக்கிறேன்
செய்த தவறை விதி ஏற்குமா??
தண்டனை தான் விட்டு போகுமோ???
எல்லாம் என் விதி என்றால்
எனக்கேன் இந்த தண்டனை
உணர்ச்சியின் பாதையிலே
உள்ளுணர்வு பேசயிலே
ஊமையாகி போனேனம்மா
நினைவுகளில் இருப்பதெல்லாம்
நிஜத்தினிலே இல்லையதனால்
நித்தமும் போராட்டமாய்
எந்த வாழ்வின் நிதர்சனங்கள்
எனக்கேதுக்கு ஆறாம் அறிவு!!!!