சதி

என் விழிகள்
உன் வதனம் காணவே
தவம் கிடக்கும்!
என் பேனா முனை
உன் பெயர் எழுதவே
அடம் பிடிக்கும்!
என் இதயம்
உன் இடம் வரவே
வேலை நிறுத்தும்!
அன்பனே....
என் வசம்
இயங்கும் இவை யாவும்
சதி செய்யும் வரை,.....
நானும் வீராய்ப்பாய் தான்
எண்ணியிருந்தேன்;
உன்னை மறந்துவிட்டேன்
என்றே!...

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (25-Feb-14, 2:38 pm)
Tanglish : sathi
பார்வை : 101

மேலே