கால் சட்டை காலம்
விடியற்காலை ஆற்று குளியல்;
தாத்தா மிரட்டி பூசும் நெற்றி திருநீறு;
கிழிந்த கால் சட்டையோட பள்ளிகூட நடைபயணம்;
போற வழியில் கோனார் கடை தேன் மிட்டாய்;
நண்பனோட சேர்ந்து திருட்டு மாங்கா;
சாயந்தரம் ஆறு மணி வர புழுதியில் விளையாட்டு;
திட்டிகிட்டே அம்மா தர பழைய சோறு;
வீட்டு வாசல்ல நிலவ பாத்த தூக்கம்.......
இதையெல்லாம் இப்ப வேல செய்யற பன்னாட்டு நிறுவனத்துல உக்காந்து யோசிகரப்ப அந்த நாள் வெயில் கூட குளுர்கின்றது...;
உக்காந்து இருக்கும் குளுர்சாதன அறை கூட சுடுகின்றது...

