இயற்கையன்னை இதயவீணையில் இருந்துவரும்
இயல்இசை இந்தியா

இதயங்களிடை இடைவெளியற்று இணைந்த
இனிமையான இந்தியா

இறையுணர்வும் ஈகையுணர்வும் பகிர்ந்தளித்து
இயக்குகின்ற இந்தியா

இரும்பு கரங்களும் ஈரமனங்களும் ஈடுகொடுத்து
வழிநடத்தும் இந்தியா

இவ்வளவு வேற்றுமைக்குள்ளும் ஒற்றுமைகண்டு
இலக்கணமாகும் இந்தியா

எழுதியவர் : karmugil (25-Feb-14, 8:33 pm)
பார்வை : 73

மேலே