வணிகர்களின் வாழ்க்கை நிலை

வணிகர்களின் நலன்காக்க
வந்தவரே சிவசங்கர்
வணிகர்கள் கண்டெடுத்த
வைரம்தான் நம்தலைவர் ..........

வணிகர்கோர் கூட்டமைப்பு
வையகத்தில் பெரும்சிறப்பு
நமக்காக போராட
நாமமைத்த ஒருஅமைப்பு ......

சிதறிக்கிடந்தோம் காகிதமாய்
சேர்ந்தேஆனோம் புத்தகமாய்
அலட்சியம்செய்த ஆணவர்க்கு
நாம் அனைவரும் தந்தோம் பாடங்களாய்.......

ஜாதிமதம் பலகடந்து
காசுபணம் நிலைமறந்து
இணைத்திட்ட புதுப்பயணம்
இதுநமக்கு புனிதப்பயணம் ...........

மிரண்டகாலம் அந்தகாலம்
இனி மிரட்டும்காலம் இந்தக்காலம்
நம்சிகைகலைக்க நினைப்பவரை
நாம்சிரம்கொய்து தொடர்ந்திடுவோம் ...........

வலுவிழந்து கிடந்தோமே
நாம் வாயடைத்து இருந்தோமே
பெரும்துன்பம் பலகண்டு
நாம் பேதலித்து போனோமே...........

நமக்காக போராட
நபரொருவர் இல்லையென்று
நாளெல்லாம் வேதனையால்
நாமெல்லாம் அழுதோமே ......

மனதில்லா மனிதர்பலர்
மாமுல்கேட்டு மிரட்டிடவே
மனக்குமுறல் கொண்டுதான்
மனதிற்குள்ளே நொந்தோமே ........

விடிவுகாலம் தேடித்தான்
தனித்தனியே முயன்றிட்டும்
விடையில்லாமல் போனதே
அதற்கு விடிவுதான் இந்தமாநாடே....

ரத்தம்சிந்தி உழைத்தகாசை
கத்திவந்து பறித்திடுமோ
இரவுபகலாய் சேர்த்தபணம்
எவர்கோ இரவலாக போய்விடுமோ ......

கந்துவட்டி கடனால்நாமும்
நொந்தகாலம் மாறிடுமோ
கருணைகொண்டு அரசும் நம்மை
கரம்கொடுத்து காத்திடுமோ ......

காலையில் இருந்து சேர்த்தகாசு
மாலைவந்தால் மறைந்திடுமோ
கடைமுடித்து கணக்கு பார்த்தால்
காளிகல்லா தெரிந்திடுமே .......

ஓய்வேஇல்லாமல் உழைத்தும்கூட
வணிகர்வாழ்வில்உயர்வில்லையே
வீட்டார் கேட்கும் பொருளைக்கூட
வாங்கிகொடுக்க முடியலையே ................

வரிகட்ட பயந்திடுவோம்
அரிசிவாங்க தயங்கிடுவோம்
வெள்ளைசட்டை அணிந்து நாங்கள்
வேதனையாலே புழுங்கிடுவோம்.......

ஆயுள்முழுதும் உழைத்தும்கூட
அனைத்தும் இழந்தோம் தொழில்தனிலே
காசுவாங்கிய இடத்தில் எல்லாம்
கடனாளி ஆனோம் முடிவினிலே ......

ஒற்றுமையோடு வாழ்ந்திடுவோம்
நம் உயர்வுக்காக ஒன்றிணைவோம்
நாம்பட்ட பாடுகளை
நாமே களைய முயன்றிடுவோம் .......

பின்னால் நகர்ந்து பயந்ததுபோதும்
முன்னாள் நடந்து மிரட்டிடுவொம்
நமது உரிமை மீட்டிடவே
ஒருமனதாய் ஒன்றிணைவோம் ........

எழுதியவர் : வினாயகமுருகன் (26-Feb-14, 10:41 am)
பார்வை : 77

மேலே