சிந்தனை செய்

கணினியைப் பற்றி சிந்தனை செய்
கன்னியைப் பற்றி சிந்திக்காதே!

தாயைப் பற்றி சிந்தனை செய்
தாரத்தைப் பற்றி சிந்திக்காதே!

மாணவனாக சிந்தனை செய்
மனைவிக்காக சிந்திக்காதே!

காதலுக்காக சிந்தனை செய்
காதலிக்காக சிந்திக்காதே!

அன்புக்காக சிந்தனை செய்
அழகுக்காக சிந்திக்காதே!

பிறர் நலம்பற்றி சிந்தனை செய்
பிரச்சனைகள் பற்றி சிந்திக்காதே!

தமிழுக்காக சிந்தனை செய்
தாய்நாட்டுக்காக சிந்தனை செய்!

ஊருக்காக சிந்தனை செய்
உன் உயர்வுக்காக சிந்தனை செய்!

புகழுக்காக சிந்தனை செய்
மற்றவர்கள் பாராட்டுதலுக்காக சிந்தனை செய்!

அப்படி செய்தால் ஒரு நாள்;
உன் நாடே உன்னை சிந்திக்கும்
பல வெற்றிகள் உன்னை சந்திக்கும்!

எழுதியவர் : ப்ரியா (26-Feb-14, 10:47 am)
Tanglish : sinthanai sei
பார்வை : 384

மேலே