கண்களால் கற்பழிக்கிறிர்
கண்களால் கற்பழிக்கிறிர்
நாங்கள்
வேலைக்கு செல்கின்றோம்
வேதனையில் வாழ்கின்றோம்
நேர்முகத்தேர்வில்
பட்டங்களை ஆராயமல்
அங்கங்களை ஆராய்கின்றிர்
கன்னியாமாய் பேசி
கண்களால் கற்பழிக்கிறிர்
கொஞ்சம் புன்னகைத்தால்
நிரப்பி விடுகிறீர்
எங்கள்
மேஜைகளை உமிழ்நீரால்
இயல்பாய் நாங்கள் பேசிவிட்டால்
கேஸ் என்றே
முத்திரையிடுகிறிர்
வார்த்தைகளை
சாட்டையாய் விசுக்கிறிர்
ரத்தம்
கொப்பளிப்பது எங்கள்
இதயத்தில் தான்
கூட்டநெரிசல்களில்
ஊறுகின்றன சில கரங்கள்
அந்தரங்கம் மீதே
வெட்டி விடவே
நினைக்கிறேன்
எங்களை முட்டி தள்ளும்
சில ஆண்குறிகளை
பெண்ணியம் பேசிக்கொண்டே
நடத்துகிறீர்
காம களியாட்டங்களை
நங்கள் வேலைக்கு தான்
வந்தோமே
எங்களை விற்பதற்கு அல்ல
ஆண்மை என்பது
பெண்மையை மதித்தலே
மறந்து போனீர்கள்
உங்கள் வீட்டிலும்
பெண் உண்டு என்பதை ............
பாண்டிய இளவல் (மது . க)