ஒமனிதனே எங்கே செல்கிறாய் நீ
கூட்டலின் மடங்குகளாய்
அழகும், அறிவும்............!
கழித்தலின் மடங்குகளாய்
அன்பும்,பண்பும்.......!
பூஜ்யத்தின் மடங்குகளாய்
மனித நேயம்........!
இப்படியாக எங்கே
செல்கிறது
மனித வாழ்வு.....!
இரக்க குணம் அறவே அற்று
அரக்க குணம் பல்கி பெருகி
மனச்சுமைகள் தான் சுமந்து
விரக்தியால் செத்தொழியுது
மனித இனம்..........!
மூன்றாம் ஜாமம் புணர்ந்து
முதல் ஜாமம் களைக்கையில்
சேலை முள்ளில் விழுந்ததா.....?
முள் சேலையில் விழுந்ததா......?
என்ற ஆராய்ச்சியில்
மனித காதல்........!
பசியைத்தின்று கதறும்
குழந்தை.......!
அலுவலக கழிப்பறையில்
பால் பீய்ச்சும்
தாய்.........!
பணத்தை சாப்பிட
முடியுமா என்ன........?
இருட்டு அறையில்
தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு
இன்னும் எத்தனை
காலத்திற்குதான்
சூரியன் கண்ணுக்கு
தெரியவில்லை என அஞ்ஞானம்
பேசித்திறிவாய் மானிடனே.....!
இனி ஏனும்
சேலைத்தலைப்பை எல்லாம்
தலைப்புசெய்தி ஆக்காமல்
திருந்தும் வழி தேடிடடா.......!