சோராதே கண்ணே

சோராதே கண்ணே!

சோராதே கண்ணே சோராதே—பிறர்
சொல்லிலே மயங்கியும் சோராதே !(சோரா)

அழகுப் பேச்சு எழுத்தும் நாடகம்—உன்
அறிவைக் கழுவும் பொய் வேடம்.
துடிப்பை உன்னிடம் சுரண்டவே நடிப்பார்
தோளுக்கு உயர்ந்தால் தூக்கியும் அடிப்பார். (சோரா)

நல்ல மனிதரெல்லாம் கள்ளம் அறியாமல்
பள்ளம் விழுந்துமே தொலைந்துவிட்டார்.
உள்ள பொழுதினை உனக்காய் வாழ்ந்து
வெல்லும் வழியினை விரைந்தே செய்க .
விழித்துக் கொண்டால் நீயும் பிழைத்துக்கொள்வாய்—
உழைப்பை மறந்தாலென்றும் தோற்றே அழிவாய்.

ஊர் நலத்திற்கு வாழ்வதில் பிழையுமில்லை—ஒரு
உண்மைக்கு சாவதில் இழப்புமில்லை.
தனியொரு உயர்வில் நன்மையில்லை—நல்ல
தலைமைக்கு அதுவும் பொருத்தமில்லை.-தூய
கடமை உணர்வின்று தொலைந்ததினால்--பொது
உடைமைகள் சுயநலம் ஆகுதப்பா!


கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (26-Feb-14, 2:11 pm)
பார்வை : 97

மேலே