நான் செத்துப் போக
காதலைக்
காரணமாக்கி
இவ்வுடலை
கண்டிப்பாக
கரியாக்க
மாட்டேன்.....!!
காதல்
தோல்விக்காக
காதல்
உடன்கட்டை
ஏறும் எண்ணமெல்லாம்
என்றும்
எனக்கில்லை....!!
காதலை
உயிர் விட்டுத்தான்
உரியவர்களுக்கு
மெய்பிக்க வேண்டிய
அவசியம்
இல்லை....!!
காதல்
உண்மை என்றால்
காதல்
நினைவோடு
காலமெல்லாம்
காலமாகும்
வரை.... கண்கள்
விழித்தே
இருக்கட்டும்....!!
தற்கொலைகள்
தரம்
கெட்ட
செய்கைகள்....
காதல் என்ன
அவ்வளவு
தரம் கெட்டதா
உனக்கு....?