தாய்க்கு ஒரு பாமாலை
இதுவெறும் கவிதையல்ல -
சாதனைப்பெண்ணின் சோதனை சுருக்கம்
பெற்றவள் விட்டுசென்ற
நினைவு சுவடுகள் .......
தலைமகனாய் பிறந்துவந்தேன்
தந்தையை உடனிழந்தேன்
பெற்றெடுத்த தாயாலே
பிள்ளையென நான் வளர்ந்தேன் ........
அவளுழைத்த காசாலே
அரைவயிறு சோறுண்டேன்
அவள்கொடுத்த அறிவாலே
அனுபவத்தை நான்கற்றேன் ........
உள்ளதை சொல்லியே
ஒழுக்கமாய் வளர்த்தாலே
ஊனமாய் இருந்துகூட
ஊர்போற்ற வளர்த்தாலே .......
தனக்கெனவே நினைக்காத
தியாகத்தாய் அவள்தானே
தன்னம்பிக்கை கொண்டுத்தான்
சாதனைகள் படைத்தாலே..........
பட்டினியாய் கிடந்துத்தான்
பாசத்தாய் வளர்த்தாலே
பாதம் ஊனம் கண்டுதான்
படுக்கையிலே படுத்தாலே ........
கடவுளெனும் அன்னையைத்தான்
கண்ணாலே கண்டிருந்தோம்
கடவுளவன் துரோகத்தால்
காலனவன் கொன்றுவிட்டான் .......
பத்துமாதம் சுமந்த அவள்
பட்டபாடு மறந்திடுமோ
பாற்கடலின் அமுதம் கூட
அவள் பாலிடம்தான் ஜெயித்திடுமோ .......
எவர் உறவு வந்தாலும்
அவளுரவு ஆகாதே
ஏந்தி வளர்த்த அன்னையைத்தான்
என்றும் மனம் மறக்காதே .......
எங்கள் உயர்வையே நினைத்தாலே ......