தேர்வு பயம்
தேர்வு சுரம் பிள்ளைக்கு
தேர்வு பயம் அன்னைக்கு
தினமும் முதுகில்
பொதி சுமக்கும் குழந்தை
பொது தேர்வெழுத
மனதில் பாரம் சுமக்கிறது
பெற்றோர் கெளரவத்திற்கு
பேர் சேர்க்க முயற்சித்து ்
தினமும் மூளையை கசக்கி
மனப்பாட எந்திரமாய்
மதிப்பெண் களஞ்சியமாய்
உறக்கதிற்கு ஏங்கி
கண்கள் வீங்கி
வயிற்றுப் பசி மறந்து
பள்ளிப் பருவ சேட்டைகள் துறந்து
பாவப்பட்ட ஜீவனாய்
தேர்வு முடிவு வரும்வரை
தினம் தினம் அஞ்சி நடுங்கும்
அசாத்திய சூழல் இது....