தோழனுக்கு அறிவுரை

கனவுகள் களைந்து போக நீ
யாருக்கும் காரணம் கர்த்தாவாக
இருந்துவிடாதே.....

தொடர்ந்துவரும்
வாய்ப்புகளை நீ என்றுமே
நழுவ விடாதே....

உன் யோசனை
எல்லை மீறியது உன் சிந்தனை
எதையும் தாண்டியது...

சிந்தனை செய்வதற்கு
நீ தாயாராக இரு அதுவே உனக்கு
வழிகாட்டியாக
தொடர்ந்துவரும்...

வெட்டிக்கதைகள் வீண்பேச்சுகள்
வாழ்க்கைக்கு உதவிடுமா...!

தெளிவாக நம்பிக்கை
வை அது உன் நடத்தையை
நெறிபடுத்தும்...
புரியாத செய்திகள் உனக்கு
புலப்படுத்தும்...

விட்டு சென்ற
உடமைகள் உனக்கு திரும்பவும்
கிடைக்கும் வெகு விரைவில்...

பின்புதான் நீ புரிந்து
கொள்வாய் இத்தனை நாள்
தாமதித்தது....

செய்திகளை சொல்லிவிட்டேன்
நாளைய சரித்திரம் படைக்க
விரைந்து செல்...

ஒரு நாள் உனது
சாதனை செய்தியாக கிடைக்கும்
உனக்கு நம்பிக்கை இருந்தால்...

எழுதியவர் : லெத்தீப் (27-Feb-14, 8:26 pm)
Tanglish : tholanukku arivurai
பார்வை : 114

மேலே