சிவராத்திரி
அடி முடி தேடி
அடியவர் அலையும்
திருஅண்ணாமலை அரசன்
புலி தோல் போர்த்தி
அருட்பால் வழங்கும்
ஆடலரசன்
உமையவளை இடப்புறம்
சுமந்த
அர்த்தநாரி புருஷன்
தீப்பிழம்பாய்
சுடர் விடும்
பூ குழம்பு
ஈசன்
பல நாள்
நிம்மதியின்றி
விழித்திருந்த என்னை
இன்றும்
விழிக்க செய்கிறான்
இனி
எல்லா நாளும்
நிம்மதியை
நிரம்ப குடித்து
நீண்ட தூக்கம்
தருகிறேன்
இன்று எனக்காக விழித்திரு
என்று
லிங்கமாய்
சிரித்தபடி
என் திருவிளையாடள்
திருத்தெய்வம்
ஒம் நமசிவாய