இலையாய் கிளையாய் தென்றலாய் ஓர் முக்கோணக் காதல்
அதுவரைக்கும் ....
ஆடாமல் ...
அசையாமல் .....
இருந்த.....( இலை)யாள்
ஆடினாள் ....
பாடினாள்....
அபிநயம் புரிந்தாள்.....
தோழிகளும் தலையாட்டினர் .....
அவள் பாட்டுக்கு ....
ஈசான மூளையிலிருந்து ....
லேசான புன்னகையுடன் .....
வந்துவிட்டான் ...
அவள் காதலன் .....
(தென்றலாய்)... தவழ்ந்து ...
அவளுடன் ....
ஊடல் கொள்ள ...
காதல் சரசம் பயில ....
உதிர்ந்து ....
நிரந்தரமாய் ....
அவன் கைப்பற்றி .....
அவனுடனேயே .....போகப்போகும்...
நாளை நினைத்ததும் ....
உவகையில் ....
ஆடினாள்...
பாடினாள் ...
இன்னும் பலமாக ....
இவர்கள் .....
ஊடலையும் ....
கூடலையும் ...
காதலையும் ...
கண்ணுற்ற ....
ஓர் இரு தலைக் கிளை .....
அழுதது ...
கண்ணீர் விட்டு ....
இரு தலைக் கிளைக்கு....
ஓர் தலை இலை மேல் ....
ஒரு தலைக்காதல் .......

