சொல்லி விடு உன் இரகசியத்தை
மல்லிகையே!.....
மருகும் உன் மனதின்
இரகசியம் என்ன?
மணிக்கணக்காய் இரவுகளில்
நீ பல ஜென்மமாய்
காத்திருக்கிறாயே , ஏனோ!
இரவு உனக்கு அப்படி
என்னதான் மாயம் செய்ததோ !
நிலவு உனக்கு எதை தான்
தினம் உரைக்கிறதோ!
உலகே தூங்கும்
நேரமதில் கூட நீ
உல்லாசமாய் உலா வருகிறாயே!
சொல்வாயா உன் இரகசியத்தை.........