காற்சுவடுகளும் காலணியும்
சிறுதும்
பெறுதுமாய் நிறைய
கனவின் கால் சுவடுகள்
காதல் கடற்கரையில் !
அன்பின் பரிசாய்
அவள் அளித்த
காலணிகள்
களைந்து கொஞ்சம்
நடந்து பார்த்தேன்
நினைவு அலை அடித்து
காதல் பதிவுகள்
கரைந்து போயின !
மனம் மட்டும்
சுமந்து திரிகிறது புரியாமல்
காதல் சுவடுகளை
கால்களுக்கு
கவிதை என்னும் பழைய
காலனி மாட்டி !
கர்ச்சாகின்