புரியவில்லை

சிந்தைக் கிளறும்
தேனார் செய்யுள்
செதுக்க இயலவில்லை !
விந்தை காட்டும்
வியப்புறு கவிதை
விதைக்க
முடியவில்லை !
முந்தைக் கவிஞர்
மூட்டிய கருத்தை
முந்திடக் கூடவில்லை !
எந்த நினைப்பில்
எழுதத் துணிந்தேன்
எனக்கும்
புரியவில்லை !

எழுதியவர் : முல்லைச்செல்வன் (1-Mar-14, 4:17 am)
Tanglish : puriyavillai
பார்வை : 82

மேலே