+நல்லா தானே வச்சிருந்தேன் லொள்ளா நீயும் போனதென்ன‌+

நல்லா தானே வச்சிருந்தேன்
லொள்ளா நீயும் போனதென்ன‌

மனைவியிடமும்
குழந்தையிடமும்
செலவழித்த நேரத்தை விட‌
உன்னிடம் தானே
அதிக நேரம் செலவழித்தேன்

காலை முதல் மாலை வரை
உன் முகம் மட்டும் பார்த்திருந்தேன்
உன் அருகாமையில்
உலகை மறந்திருந்தேன்

உனக்கு வேண்டிய வசதியெல்லாம்
வீட்டில் செய்து கொடுத்தேனே!

உன்னையும் ஒரு உறுப்பினராக‌
குடும்பத்தில் ஆக்கியிருந்தேனே!

இருக்கும் வரை
இன்பம் கொடுத்தாய்!
திடிரென்று
இயக்க மறுத்து
துன்பம் கொடுத்தாய்!

உன் இலக்குத்தான் என்ன?

நான் என்றேனும்
உனை மறைமுகமாக சாடியிருந்தால்
அதனை எல்லாம் தயைகூர்ந்து
உன் மனம் விட்டு விலக்கு...

என்னிடம் ஏதேனும்
மாற்றம் வேண்டுமெனினும்
தாராளமாய் விளக்கு...

அன்று நீ எனக்கொரு
விளக்கைப்போல வெளிச்சம் கொடுத்தாய்...
இன்றோ எதிரியாகி
இருளோடு இணைந்துள்ளது போல‌
உணரவைக்கிறாய்...

சீக்கிரம் திரும்ப வந்து விடு

உன் இயக்கத்தினால்
என் இதயத்தையும்
மறுமுறை எப்பொழுதும் போல‌
மகிழ்வாய் இயக்கிவிடு

எனது இனிய‌
வம்பு செய்யும்
கணினிப்பெண்ணே....!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Mar-14, 7:10 am)
பார்வை : 215

மேலே