பிரியமான தோழியே

நாம் எழுதித் தீர்த்த பள்ளிச் சுவர்களும்
கிறுக்கல் வரைந்த வகுப்பறை மேசைகளும்
நம்மை காணமலே கலங்கி இருக்கும்..
பொழுது போக்கிய படிக்கட்டுகளும்
அரட்டை அடித்த வகுப்பறை கதவடிகளும்
நாம் இன்றியே வாடி இருக்கும்..
நிழல் தேடி தஞ்சம் அடைந்த மரத்தடிகளும்
அங்கு கொட்டித் தீர்த்த வார்த்தைகளும்
பெயர் பதித்த மரக் கிளைகளும்
நம் நினைவில் கட்டுண்டு கிடக்கும்,,
நீளும் நினைவுகள்
நிகழ்ந்துவிட்ட நிஜங்களே..
அவை இறந்த காலம் என்றாலும்
என்னை இறக்க வைப்பவையல்ல,
தொடரும் காலம் யாவிலும் என்னை
உயிர்ப்போடு வாழ வைப்பவை!!!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (28-Feb-14, 6:05 pm)
பார்வை : 342

மேலே