முடிந்து போன வாழ்க்கை

என் கவிதைகளும்
என் கற்பனைகளும் தீர்ந்துவிட்டன..
எப்படி இருக்கிறாய்
என்ற கேள்விக்கு
எப்படி இருந்தால்
உனக்கு என்ன?
என குரல் உடைந்து அழும்போது....
எல்லாம் முடிந்து விட்டு இருந்தது.

எல்லாம் முடிந்து விட்டு இருந்தது....
எனக்கும் உனக்குமாய் ஒரு
நூலிழை பந்தம் மட்டும்
பட்டுப்போகாமல்...

எல்லாம் முடிந்து விட்டு ...
உன் அழுகுரல் மட்டும்
என் செவிப்பறைகளில்
அறைந்துக் கொண்டு...

எல்லாம் முடிந்தே விட்டது..

எழுதியவர் : கவிதை தாகம் (1-Mar-14, 7:54 am)
பார்வை : 191

மேலே