வாழ்ந்து தான்பாருங்களேன்இயற்கையுடன

மலரின் இதழ்களிலிருந்து
வண்ணத்தை பிரிக்க முடியாமல்
தவிக்கும் குழந்தை !
குச்சியில் நிற்கும் தட்டானின்
வாலைப் பிடிப்பதா
சிறகைப் பிடிப்பதா
என்ற குழப்பத்தில்
தட்டானைத் தவறவிடும் சிறுவன் !
மிதப்பக் கட்டையின்
இழுவையை வைத்தே
இழுப்பது கெண்டையா, கெழுத்தியா
என்று கூறும்
இளைஞனின் சாதுர்யம்!
குளத்தில்
சாய்வாக கல்லெறிந்தால்
அது நீரின் மேல்
தாமரை இலைகளைத் தாண்டி
தாவித் தாவிச் செல்லும் விந்தை!
பின்னிரவின்
அடையாளச் சின்னமான
சலனமற்ற இரவின்
நித்யத்தைக் கலைக்கும்
பூச்சிகளின் ரீங்காரம்!
இன்னும் ஆயிரமாயிரம்.......
HD வண்ணத் தொலைக்காட்சிப்
பெட்டியின்
டிஸ்கவரி சேனலை அணைத்துவிட்டு,
வாழ்,க்கையின் உன்னதமான
தருணங்களை வாழ்ந்து தான்
பாருங்களேன்
இயற்கையுடன்!!

எழுதியவர் : அச்சில் ஏறா கவிதைகள (1-Mar-14, 10:24 am)
பார்வை : 67

மேலே