செம்புலப் பெயல் நீர்

யாயும் ஞாயும் யாராகியரோ
என்று துவங்கியதும்
அருகிருந்த காதலியைக்
காணவில்லை..

உளறிக் கொண்டிருப்பவனுடன்
எப்படி வாழ்வதென்றோ ?

செம்புலப் பெயல்நீரைத்
தேடுகிறேன்
இதயங்கள் கலந்திட.

கிடைப்பதோ
சாக்கடை நீர்தான் !

எழுதியவர் : முல்லைச்செல்வன் (2-Mar-14, 2:34 am)
பார்வை : 73

மேலே