வேண்டாம் வன்முறை

கத்தியைக் கையில் எடுத்தவன் வாழ்க்கை
கத்தியில் தானே முடிகிறது !
சத்திய வழியில் செல்பவன் உள்ளம்
நித்தமும் அமைதியில் விடிகிறது !

ஆண்ட மன்னர் ஆயுத மெடுத்தார்
பூண்ட மறத்தை நிலைநாட்ட !
ஆண்டவர் தானும் ஆயுதம் கொண்டார்
வேண்டிய அன்பரின் துயர்போக்க !

உளியும் கல்லை உடைக்கும்; கலையைத்
தெளிவாய் உலகில் வெளிகாட்ட !
ஒளிரும் பொன்னை கொல்லர் அடிப்பர்
மிளிரும் வண்ணம் நகைபூட்ட !

மனிதா நீயேன் ஆயுத மெடுத்தாய்
மனித உயிரை மாய்த்திடவா ?
இனியும் வேண்டாம் வன்முறைச் செயலும்
இனிதாய் திருந்தி வாழ்ந்திடவா !

எழுதியவர் : முல்லைச்செல்வன் (2-Mar-14, 2:06 am)
Tanglish : ventaam vanmurai
பார்வை : 106

மேலே