நீ அதில் கைதேர்ந்தவளோ

நான் எதிர் பார்த்தேன்
நீ அருகில்வரும் போது
என்னை பார்ப்பாய் என்று
எப்படி மனசு வந்தது
பார்க்காமல் செல்ல ....?

வெடித்தது என் இதயம்
சற்றே திரும்பி பார்த்தாய்
யாருக்கும் புரியாத காதல்
சைகை செய்தாய் ..
வெடித்த இதயம் ஒட்டியது ...!!!

காதல் துடிக்க விட்டு
ரசிக்க வைக்கும் அற்புத
கலை -நீ அதில்
கைதேர்ந்தவளோ .....!!!

எழுதியவர் : கே இனியவன் (2-Mar-14, 12:09 pm)
பார்வை : 72

மேலே