உயிர் தழுவி சென்றாயோடி

விலகிச்சென்ற மேகங்கள்
மோகம் கொண்டு
ஊடல் கொண்ட
கதை சொல்ல வந்தாயோடி........!

ஜீவ ராசிகள் எல்லாம்
காதல் மடலனுப்ப
பூப்பெய்திய
புது சேதி
கொண்டு வந்தாயோடி........!

தவம் கலைக்கும்
வரம்கொடுத்து
சாபம் தொலைக்க
விமோச்சனம்
தந்தாயோடி.........!

மூச்சிரைக்க
ஓடி வந்து
கைதீன்டாத
மெய் தீண்டி
முத்தங்கள்
கொடுத்தாயோடி.......!

பதம் பார்க்க
பாதம் தழுவிய
பாலையோடு
புணர்ந்து கலைந்தாயோடி..........!

கை நீட்டி
முகம் ஏந்தி
மார் விரித்து
காத்திருக்க........

தொப்பையாக
நனைத்து
அங்கங்களைஎல்லாம்
ஸ்தம்பிக்க செய்தாயோடி.......!

கள்ளிக்கெல்லாம்
பாலூட்டி.......
தண்ணீர் பூக்களுக்கெல்லாம்
காய்ச்சல் வர செய்தாயோடி.....!

தவளைக்கு
தாரை வார்த்து
மேளம் கொட்டி
தாலி கட்டி
தேனிலவு செய்தாயோடி.......!

வெட்கம் கொண்டு
உதடு கடித்து
உயிர் தழுவி
சென்றாயோடி............!



**********சற்று முன் பெய்த மழை.........!****************

எழுதியவர் : vidhya (2-Mar-14, 9:21 pm)
பார்வை : 264

மேலே