பாவம் எப்படி தெரியும்

பாலைவன பாறையின் மீது
மழைத்துளி ஒன்று விழுந்ததே !
அதை பார்த்த
விதை ஒன்று
துளிர் விட்டு எழுந்ததே !
பாவம் ... அதற்கு எப்படி தெரியும் ?
முளை விட்டு வருவது ,
வெயிலில் கருகி போகத்தான் என்று !

அழுது கொண்டிருந்த பிள்ளையிடம்
பொம்மை கொடுத்தாள் அன்னை !
அதன் மீது அன்பு வைத்த
அந்த மழலையோ ...
அதை கட்டிபிடித்து உறங்கியது !
பாவம் ... அதற்கு எப்படி தெரியும் ?
அது ஒரு நாள் உடைந்து போகும் என்று !

நான் பார்த்த ரோஜா செடி ...
அதன் மொட்டு இதழ் விரித்து பூத்ததை எண்ணி
காற்றில் மெல்ல ஆடி கொண்டிருந்தது ...
பாவம் ... அதற்கு எப்படி தெரியும் ?
அது அன்றே பறிக்கப்படும் என்று !

என் வாழ்வில் நீ வந்தாய் பெண்ணே !
பாவம் ...
என் இதயத்திற்கு எப்படி தெரியும் ?

இவன்,
நிலவின் நண்பன் !

எழுதியவர் : நிலவின் நண்பன் (சிவகிரிதர (3-Mar-14, 5:13 pm)
பார்வை : 123

மேலே