சமத்துவ விடியல்

மண்ணின் மகத்துவம் சாதி;
அறிவின் மூளையே சாதி;
நாகரீகத்தின் இதயம் சாதி;
இதயத்தின் துடிப்பு சாதி;
உயிர் வளர்த்த உரமே சாதி;
பேதத்தின் மரணம் சாதி;
அமைதியின் பிறப்பிடம் சாதி;
அன்பின் கருவறை சாதி;
ஆனந்தத்தின் ஆழ்கடல் சாதி;
மூச்சின் முகவரி சாதி;
வாழ்வின் வள்ளல் சாதி;
உறுப்பின் வலக்கரம் சாதி;
அடிமயின் விடுதலை சாதி;
ஆக்கத்தின் ஆரம்பம் சாதி;
அழிவின் முடிவு சாதி;
சோகத்தின் தற்கொலை சாதி;
கண்ணீரின் கைக்குட்டை சாதி;
என்றெல்லாம் நினைத்து
நினைத்து
உணர்வற்றுப்போய்
உறவற்றுப்போனாய்
என்றும் மறவாதே
சமத்துவ விடியலுக்கு சாதி விறகாகும் போது அதில்
நீ சாம்பலாவாய்......................

எழுதியவர் : சிவ பாலா (3-Mar-14, 9:15 pm)
Tanglish : samathuva vidiyal
பார்வை : 1162

மேலே