நிஜமாய் ஓர் காதல்
சிதைந்த உடலை
செதுக்கி சிலையாக்கி
இழந்த உயிரை
கொணர்ந்த சிற்பி!
படர்ந்த இடத்தில்
நிறைந்த காடு
அழிந்த நிலையில்
உயிரோவியமாய்...!
இழந்த உலகை
மறந்த தலைமுறை
வியந்து பார்த்திட
படைக்கும் கவியே...!
மண்ணில் புதைந்து
விதைபோல் எழுந்து
ஆலம் விழுதாய்
உலகை காக்கும் மழையாய்...!
உதிர்ந்த காதலின்
சின்னம் தாஜ்மஹால்
உயிர்பெறும் காதலின்
சாட்சியாய் கடல் அலைகள்...!
எத்தனை காதல் வீழ்ந்தாலும்
உண்மை காதல் உயிர்பெறும்
பரிட்சயத்தில் தாயாய்
உயிர் துடிக்கும் அலையே...!