நாங்கள் காதலர்கள் வித்யா

காதலி***************

நான் நடந்தால்
தென்றல்.....!

சிரித்தால்
பௌர்ணமி...........!

இருந்தால்
மழை...................!

அழுதால்
ரத்த வெள்ளம்.....!

**************************************அவனுள்

அவன் என்னை
அழச் சொன்னான்,
துக்கத்திலோ
வருத்தத்திலோ அல்ல........
சந்தோசத்தில்......!

நான் அழும்
கண்ணீர் துளி கூட
அவன் மீதுதான்
விழவேண்டுமாம்.......!

காதல்
பாதையில்.......
காதலர்கள்,
வழிப்போக்கர்களாம்.......!

அந்த
ஒரு வழிப்பாதை
பயணத்திலே......

என் பாதங்களுக்கு
மலர் வைத்துவிட்டு
அவன்....... மட்டும்
முள் மீது நடக்க
பழகி கொண்டான்...........!

பெற்றோர்களின்
அகராதியில்.....
காதலர்கள்
பலிபீடத்திற்கு
தாரை வார்த்து
கொடுக்கப்பட்டவர்கள்......!

ஆம்.......
அவர்கள்
நடந்தால்........
இவர்கள் கல்லெறிவர்

நீந்தினால்
வலைவிரிப்பர்.........!

பறந்தால்
குறிவைப்பர்...........!

இறுதியில் அவர்கள்
கல்லறைக்கு
மலர்வளையமும்
வைப்பர்......................!

மனதை
கல்லறையில் புதைத்துவிட்டு
உடலை
இருட்டில் தொலைத்துவிட்டு
கால் போன போக்கில்
காணாமல் போகும்
சராசரி காதல் அல்ல
இது,
சான்றோரே.........
புரிந்து கொள்வீர்.............!

காதலன்****************

ஆம்,
கனவுதான்......
மலர்கள்
முகம் பார்க்கும் பனித்துளி.....!

பதம் பார்க்க
பாதம் தழுவும் பாலை............!

தென்றலுடன் நடந்துவந்த
நந்தவனச்சோலை....................!

தவறாக சொல்லிய
வார்த்தைக்காக உதடுகடிக்கும்
என்னவளின் வெட்கம்.............!

அத்தனையும்
கனவுதான்.....................!

காதல்......
வானவில்லில்
ஊஞ்சல் கட்டும்
ஓர் வசீகர கனவு.....................!

அவளுக்காக நானும்
எனக்காக அவளும்
எங்கள் காதலுக்காக
நாங்களும்..........
உயிரை மட்டுமே
பத்திரப்படுத்த முடிந்தது......!

வாழும் வரை
காதலிப்போம்.......

வாழ்க்கைக்கு பிறகு
உலக காதலர்களுக்கெல்லாம்
காதல் மணம் பரப்புவோம்.........!













*********************************வித்யா********************************

எழுதியவர் : வித்யா....... (4-Mar-14, 12:23 am)
பார்வை : 292

மேலே