வாராண்டா கட்டபொம்மன்

வாராண்டா கட்டபொம்மன்.!!

வாராண்டா வாராண்டா கட்டபொம்மன் வாராண்டா.
வணங்காமுடி வீரனவன் வரிச காட்டி வாராண்டா.
எட்டப்பன்களக் காதறுக்க ஏகியவன் வாராண்டா.
கட்டுத் தூக்குக் கயிறறுத்து காப்பாத்த வாராண்டா.

பட்டப் பகல் கொள்ளைகளை பட்டொழிக்க வாராண்டா`
வெட்டவெளி வீதிக் கொலை தட்டிக்கேக்க வாராண்டா`
வன்கொடுமைக் கற்பழிப்பு இன்னல் நீக்க வாராண்டா`
பெண்ணடிமை செய்வோரை பிச்செறிய வாராண்டா.

ஊழல்செய் பேயர்ககளை ஓட்டுதற்கு வாராண்டா.
கூலிப்படை நாயர்களை காலிசெய்ய வாராண்டா.
பொய்யரசியல்ப் பித்தர்களைப் புறம்போக்க வாராண்டா.
கையூட்டுக் கள்வர்களைக் களையெடுக்க வாராண்டா.

சுயநலக் கூட்டத்திற்கு சூடு வைக்க வாராண்டா.
சுரண்டும் பேர்வழிகளுக்கு கரண்டு வைக்க வாராண்டா.
பதுக்கும் கொள்ளைத் திருடர்களை ஒதுக்கி வைக்க வாராண்டா.
பணம் பறிக்கும் பாவிகளை இனம் பிரிக்க வாராண்டா.

காமவேட்டைக் கயவர்களை காவு கொள்ள வாராண்டா.
பாவச்செயல் இழியோரை எரித்தழிக்க வாராண்டா.
ஊதாரிக் கூட்டங்களை ஒழித்துக்கட்ட வாராண்டா.
நீதிவழி நியாயங்களை நிலை நாட்ட வாராண்டா.

ஈழத் தமிழ் மக்களுக்கு தோள்கொடுக்க வாராண்டா.
வீரம் போற்றும் வீரர்கட்கு வாள்கொடுக்க வாராண்டா.
ஈனங்கொண்ட எதிரிகளை வேரறுக்க வாராண்டா.
மானங்காக்கும் தமிழினத்தை மகுடமேற்ற வாராண்டா.

எனக்கும் கூடத் தெரியாது எப்ப அவன் வாராண்டா?
கனக்கும் நம்ம சுமை இறக்கக் கட்டாயம் வாராண்டா.
மணக்கும் எந்தன் நினைவிலே கனவாக வாராண்டா.
கணக்கு அது நேராகும் காலம் அதில் வாராண்டா/

கொ.பி.அய்யா.

குறிப்பு:கரிசல் மண்ணில் ஒரு காவியம்
=====---------------------------------------------------
=======அத்தியாயம் 15/////182093
=======-----------------------
படிக்க வாருங்கள் அன்பர்களே!

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (4-Mar-14, 3:35 am)
பார்வை : 131

மேலே