எச்சில் பகல்கள்

உண்டு உறங்க வசிப்பிட மில்லை
........ஊட்டி மகிழ உறவு யில்லை
காசு தேடியே தூசியில் நடந்தால்
........காறி உமிழும் கலகர்கள் இங்கே
பிச்சை பாத்திரம் ஏந்திய இவருக்கு
........பிச்சை போட மனங்க ளில்லை
எச்சி லிலை தேடும் இவர்க்கு
........எச்ச மாய் போனநா டெதற்க்கு
காய்ந்து போன வயிறு கேக்கும்
........காலுணவுக் காகத்தானே காத்தி ருப்பு ...

எழுதியவர் : பாவூர்பாண்டி (4-Mar-14, 8:07 am)
Tanglish : echchil pagalkal
பார்வை : 91

மேலே