ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று

ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று. ஒரு குரங்கைத் தவிர வேறு யாருமே உயிர் பிழைக்கவில்லை.. துப்பு துலக்க வசதியாக, அந்தக் குரங்குக்கு தட்டச்சு தெரிந்து இருந்தது..

அதிகாரிகளுக்கும் குரங்குக்கும் நடந்த உரையாடல் இது..

அதிகாரி ; விமானம் கிளம்பும் போது என்ன நடந்தது..? பயணிகள் என்ன செய்தார்கள்..?

குரங்கு ; சீட் பெல்ட் போட்டார்கள்..

அதி ; பணிப் பெண்கள்..?

குர ; பெல்ட் போட உதவினார்கள்..

அதி ; விமானிகள்.. ?

குர ; விமானத்தை கிளப்பினார்கள்..

அதி ; நீ என்ன செய்தாய்..?

குர ; வேடிக்கை பார்த்தேன்..

அதி ; 15 நிமிடம் கழித்து என்ன நடந்தது..?

குர ; பயணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.. பணிப்பெண்கள் பவுடர் பூசிக்கொண்டார்கள்.. விமானிகள் விமானத்தைக் கையாண்டூ கொண்டிருந்தார்கள்..

அதி ; நீ என்ன செய்தாய்..?

குர ; நான் விமானத்தை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தேன்..!

அதி ; விபத்து நடக்கும் போது என்ன நடந்தது..?

குர ; பயணிகள் தூங்கினார்கள்.. பணிப்பெண்கள் ஓய்வறைக்குப் போய்விட்டார்கள்.. விமானிகள் பணிப்பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்..

அதி ; நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

குர ; நான் விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்..

எழுதியவர் : ராஜ் குமார் (4-Mar-14, 3:55 pm)
சேர்த்தது : ராஜ் குமார்
பார்வை : 201

சிறந்த நகைச்சுவைகள்

மேலே