கடவுளின் நாடு
நீரின்றி தவிக்கும் பயிர்கள் இல்லை
நாவறட்சி காணவைக்கும் வெயிலும் இல்லை
அதிருந்தாலும் குடிநீர் பஞ்சமில்லை
அவ்வளவு ஏன்?
முப்போகம் விளைய நிலமும் இல்லை
அதற்கான பூகோள அமைப்புமில்லை
வீணாய் போய் கடலில் சேர்ந்து
உப்பாய் மாறப்போகும் நீரை
கொடுக்க மறுக்கிறார்கள்
நீர் வேண்டி நிலைகுலையும் பயிர்களை காக்க
நீர் கொடுத்து தமிழக விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்க்க,
ம்ம்ஹூம்ம்ம்!!!
சொல்கிறார்கள் அவர்கள்,
அது கடவுளின் நாடாம்!!!
அவர்கள் கடவுளின் மக்களாம்!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
