என் சிறப்பு
பொழியும் மழையினை
வான் சிறப்பு
என்று பாடினான் வள்ளுவன் !
பொழியும் நிலவினை
காதல் சிறப்பு
என்று பாடினர் கவிஞர்கள் !
புரியும் புன்னகையை
என் சிறப்பு
என்று எழுதுவேன்
என்று யோசித்திருக்கையில்
புன்சிரிப்பு
என்று எழுது என்று
அவள் சொன்னாள் !
----கவின் சாரலன்